8/19/11

உலக கவியே .....எங்கள் தோழரின் பெயர் .பார்கவி.இவர் கர்நாடகத்தில் பிறந்தவர். தற்போது சென்னை ஆவடியில் இருக்கிறார். இவரின் பிறந்த தினம் ஆடி மாதம் 27(ஆகஸ்ட் 12 ). இவர் எங்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் அறிமுகம். அவ்வாண்டு அவர் பிறந்த தினத்திற்கு (நானும்,தோழர்.ஜீநா) எழுதிய வரிகள் கீழே ...

உலக கவியே .....

எங்கள் பாட்டனாம்
பாரதத்தில் அக்னி குஞ்சுகளை
பரப்பினான் பாரதி.
நீ - எங்கள் பாரதத் ''தீ''..


மகா கவி மூலம்
கண்ட புதுமை பெண் - நாங்கள்

பார் கவியாய் காண்கிறோம்.
''சட்லஜ்'' நதிக்கரையில்
விதைக்கப்பட்ட விதையின்

சிதறல் நீ....
.

கன்னடம் தோன்றி

தமிழகம் வரும் - புது

காவிரி தோழி நீ...

காவிரி கண்டு

ஆவடி கொண்ட - எங்கள்

ஆடி காற்றும் நீ...

உன் போர் சூறாவளி
கண்டு கலங்க போவது - ஏழைகளன்று
ஏகாதிவாதிகளே....

எதிரிகளுக்கு சூறாவளியாகவும்
தோழர்களுக்கு சுவாச காற்றாகவும்

விளங்கும் எங்கள் கவியே....

பார் கவியே ...

பல நூறு ஆடிகள்
காண
வாழ்த்தும் ...

கவியின் இரு கரங்கள்..
G.J.கோபிகவிகுமார்..

No comments:

Post a Comment