பாசம்
ஒருவருக்கு ஒருவர்
அன்பு செலுத்துதல், செல்லமான
அன்பு செலுத்துதல், செல்லமான
கொஞ்சல்கள், கெஞ்சல்கள்
அதிகமாக இருக்கும்.
நெருங்கிய நட்பிற்கும் ,
காதலுக்கும் அன்பு ஓன்று தான்.
****************************************************
சண்டை
சில சில
செல்ல சண்டைகள்
திமிரான பேச்சுக்கள்
அதிகமாகவும் குறைவாகவும்
நட்பிலும் காதலிலும்
சண்டைகள் காணப்படும்.
***************************************
கோபம்
அளவுக்கு அதிகமான
அன்பும்,பாசமும்
வைக்கும் போது
கோபம் என்ற மூன்றாவது
நேசமும்
சேர்ந்துகொள்கிறது
*********************************************
உணர்வு
சில நேரங்களில்
பேசி கொள்ளாத போது
இரண்டு உள்ளங்களும்
மௌனத்தால்
உணர்வுகளால் பேசிக்கொள்ளும்
இது நட்பிலும்
காதலிலும் மட்டும் உண்டு.
*****************************************
நம்பிக்கை
வாழ்க்கை நம்பிக்கையின்
மையத்தில் இருந்து சுழன்று வருகிறது.
ஒருவர் மீது வைத்த நம்பிக்கையை
இழந்தால்? மீண்டும் அவர் மீது
அதே நம்பிக்கை வைக்க முடியாமல் போகும்.
இது நட்பிற்கும் காதலுக்கும் ஓன்று தான்.
************************************************
பிரிவு
பார்க்க, பேச முடியாமல்
சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும்.
மீண்டும் பார்த்து பேசும் வரை
ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு
உறுத்திக்கொண்டே இருக்கும்.
இது இரண்டிற்கும் பொதுவானவை .
************************************************
பகிர்வு
சின்ன சின்ன சந்தோசங்களை
பகிர்ந்துகொள்ள துடிக்கும்.
பகிர்ந்து கொள்ளும் வரை
மனதில் பெரிய கனம் இருப்பதாய் உணர்த்தும்.
பகிர்ந்து கொள்ளும்போது தான்
இரட்டிப்பு ஆகும்.இது இரண்டிற்கும்
பொதுவானவை .
*********************************************
கஷ்டம்
இரண்டு உள்ளங்களிலும்
தனிப்பட்ட கஷ்டங்கள் இருக்கும்.
அதைபகிர்ந்து கொள்ளும் கனம்
குறைந்த உணர்வு.
இது இரண்டிற்கும் பொதுவானவை .
**************************************************
மகிழ்ச்சி
இருவருக்கும்
சில சில சண்டைகளில்
சிலமணி நேரங்கள் முதல்
பல நாட்கள் வரை
மௌனமாய் நட்பு பயணிக்கும்.
சந்தோஷமான தருணங்களை
நினைத்து பார்த்தல் மகிழ்ச்சி பொங்கும்.
இது இரண்டிற்கும் பொதுவானவை.
**************************************************
விட்டுகொடுத்தல்
இது இன்றியமையாத
ஒவ்வொருக்குள்ளும்
இருக்கவேண்டியவை.
விட்டுகொடுத்தல் உன் உயிர்
தோழி/தோழனிடம் தானே.
இது இரண்டிற்கும் பொதுவானவை.
*********************************************************
வேறுபாடு
இரண்டும் ஒன்றி போனாலும்
இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
புரிதல் என்ற ஒரு சிறு நூலிழையை
புரிந்துகொண்டால்
நட்பிற்கும் காதலுக்கும்
வேறுபாடு தெரியும்.
*****************************************************
(என்றும் என் நட்பிற்காக ......18.12.2012)
karanaminri pirithalum
ReplyDeletepinnunarnthu
tholserthalum "natpil"
mattumae saathiyam...!
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
வலைசரத்தில் அறிமுகம் படுத்தியதற்கு நன்றி ... ஆசிய ஓமர் அவர்களுக்கு
Deleteஅழகான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ... இரவின் புன்னகை
Deleteதங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ... இரவின் புன்னகை , ஆசிய ஓமர் ,மற்றும் பிரதீப்
ReplyDelete