8/19/11

உலக கவியே .....



எங்கள் தோழரின் பெயர் .பார்கவி.இவர் கர்நாடகத்தில் பிறந்தவர். தற்போது சென்னை ஆவடியில் இருக்கிறார். இவரின் பிறந்த தினம் ஆடி மாதம் 27(ஆகஸ்ட் 12 ). இவர் எங்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் அறிமுகம். அவ்வாண்டு அவர் பிறந்த தினத்திற்கு (நானும்,தோழர்.ஜீநா) எழுதிய வரிகள் கீழே ...

உலக கவியே .....

எங்கள் பாட்டனாம்
பாரதத்தில் அக்னி குஞ்சுகளை
பரப்பினான் பாரதி.
நீ - எங்கள் பாரதத் ''தீ''..


மகா கவி மூலம்
கண்ட புதுமை பெண் - நாங்கள்

பார் கவியாய் காண்கிறோம்.
''சட்லஜ்'' நதிக்கரையில்
விதைக்கப்பட்ட விதையின்

சிதறல் நீ....
.

கன்னடம் தோன்றி

தமிழகம் வரும் - புது

காவிரி தோழி நீ...

காவிரி கண்டு

ஆவடி கொண்ட - எங்கள்

ஆடி காற்றும் நீ...

உன் போர் சூறாவளி
கண்டு கலங்க போவது - ஏழைகளன்று
ஏகாதிவாதிகளே....

எதிரிகளுக்கு சூறாவளியாகவும்
தோழர்களுக்கு சுவாச காற்றாகவும்

விளங்கும் எங்கள் கவியே....

பார் கவியே ...

பல நூறு ஆடிகள்
காண
வாழ்த்தும் ...

கவியின் இரு கரங்கள்..
G.J.கோபிகவிகுமார்..

4/30/11

காகித நீர்

நான் இறந்த பிறகும்,
என் உடலை பார்க்க
அவளை அனுமதிக்காதீர்.

அவள் அங்கேயும் வந்து

காகித நீர் பூக்களை
உதிர்த்து விட்டு செல்வாள்.

ஜீ.ஜீ ...தி.கோடு.

12/12/10

அன்புத்துளி

என் பெற்றோர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் உறவினர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் நண்பர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் அருகாமை வீட்டுகாரர்களிடமும்
கேட்க வேண்டாம்.
என் தலையணையிடம்
மட்டும் கேட்டு பார்.
அது சொல்லும் உனக்கான அன்பை.
அனுதினமும் அன்பை துடைத்து
கொண்டிருப்பது அதுதானே.
ஜி.ஜி..தி.கோடு

10/9/10

ஆதரவு

பார்க்க ,பேச வேண்டாமென
செவிகளில் ஆழமாய் அறைந்தாள்.எனக்கு
துணையாக நின்றது .பேருந்து நிறுத்த தூண்கள்
மறைந்திருந்து பார்ப்பதற்கு.
ஜி.ஜி...தி.கோடு.

4/1/10

விழி நீர்..

கனவில்
உன் கண்களில் ஒரு துளி நீர்
தலையணையை நனைத்தது-எனது
விழி நீர்.

ஜி.ஜி.... தி.கோடு.

3/26/10

மழை

இன்றாவது முத்தம்

தருவாயா என்று ஏக்கத்தொடு

பூமியும், ஏழையும்.

ஜி.ஜி.தி.கோடு.

தவிப்பு..

உன் வட்ட (முக) நிலவுக்குள்
நான் - வெளியே
வர முடியாமல்.
ஜி.ஜி.... தி. கோடு.

3/8/10

பார்வை..

வார சந்தை
சத்தம் இலலாமல் நடக்கிறது.
பார்வை பரிமாறல்கள்.
க.கோபி.. தி. கோடு..

ஹைக்கூ..(மாப்பிள்ளை)

மகளுக்கு படித்த மாப்பிள்ளை
தேடினார்கள் . தன் பையனை
தார் போட அனுப்பிவிட்டு.
.கோபி ..தி.கோடு

ஹைக்கூ ..(மூக்குத்தி)

நிலவுக்குள்
நட்சத்திரம் - என் அன்பியின்
மூக்குத்தி.
.கோபி ..தி.கோடு...

1/4/10

ஹைக்கூ ....3

வெள்ளை புடவை
சகுனம் பார்த்தான். தன் மனைவியின்
நினைவிடத்திற்கு செல்லும் பொது
.கோபி தி.கோடு...

10/6/09

தீண்டாமை

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம். பின் ஏன்?
கடவுள்கள் கோயிலுக்குள்
செல்வதை தடுக்கீறீர்கள்.
.கோபி ....தி.கோடு...

9/28/09

ஹைக்கூ ..2

பட்டு சென்டரில்
பில் தொகை செலுத்தினார்கள்.
கீரை காரம்மாளிடம் பேரம்.
க.கோபி ..தி.கோடு..

8/10/09

முத்தம்

என் கன்னகுழிக்கான
காரணம் - உன்
இதழ்களே......
க. கோபி .. தி.கோடு ...

7/13/09

ஹைக்கூ .1

எங்கள் உணவகத்தில்
குழந்தை தொழிலாளர்கள் இல்லை.
அட்டையை மாட்டியபடி சிறுவன்.
.கோபி.... தி.கோடு ...

7/5/09

நாகரீக பிச்சைக்காரன்

பேருந்து நிறுத்தத்தில்
சார் ...
பசிக்குது சார் ..
என் கால்களை இழுத்தப்படி
இளந்தளிரின் குரல்
இதயத்தில்
நெக இடுக்கில் ஊசி
குத்தியது போல் வலி ...
மனம் குமறியது
'நானும் உன் போல்
பிச்சைக்காரன் தான்'
'நீயோ தட்டுடன்
நானோ பட்டத்துடன் '

க.கோபி தி.கோடு ....

6/29/09

ஹைக்கூ

தேங்க்ஸ் சொல்லி
நன்றியை மறக்கிறார்கள் ....

க. கோபி ...தி.கோடு.

6/17/09

ரோஜா ...

உன் தோழி அப்படி என்ன தான்
பேசுகிறாள் தினமும் . உன் காதோர
ஒற்றை ரோஜா
....க .கோபி ..தி .கோடு

6/16/09

அழகு பேருந்து ...

அரசு பேருந்தும்
அழகாக தெரிகிறது - என் அன்பி
அதில் அமரும் போது...
..க.கோபி ... தி. கோடு.

தந்தை

முதுகில் தூக்கி வளர்த்தார்
இன்றும் தூக்கி வளர்க்கிறார்
மூட்டை தூக்கும் தொழிலாளி.
...க.கோபி ..தி.கோடு ...